தரமற்று அமைக்கப்பட்ட சாலை – 2 மாதத்திற்குள் சேதமடைந்தது

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் ரயில் நிலையம் செல்லும் சாலையும், அங்கிருக்கும் குடியிருப்பு சாலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது.


சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போதே கடற்கரைத்தெருவாசிகள் தரமற்ற வகையில் சாலை அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர். ஆனால் தரமான சாலை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டது.


இந்நிலையில் சாலை அமைக்கப்பட்டு 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் சாலை சேதமடைந்துள்ளது. ஒரு லாரி சென்றதற்கே சாலை சேதமடைந்து காணப்படுகிறது.


சாலைப்பணிகளுக்கு பல லட்ச ரூபாய் ஒதுக்கியும், தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவது தொடர் கதையாகி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
தில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 26 பேரில், டில்லி வாலிபர் உட்பட 4 பேருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர்
கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த மருத்துவமனை
Image
அதிரையில் 16ஆம் நாள் தொடர் போராட்டம் – தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு